இராமநாதபுரத்தில் பிப்ரவரி.5 அன்று இராமநாதபுரம் பேருந்து பகுதிகளில் இருந்த சாலையோர வியாபாரிகளையும் பெண்களையும்
தெரு நாய்களைப் போல நடத்தியது அப்புறப்படுத்தியதை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்றத்தில் சிஐடியு இராமநாதபுரம் மாவட்ட சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் சார்பாக வழக்கு தொடுக்கப்பட்டது.
அந்த தீர்ப்பில் இராமநாதபுரம் நகராட்சி நிர்வாகம் செய்தது தவறு என 2014 சட்டத்தை அமுல்படுத்தவில்லை. எந்தவித முன் அறிவிப்பும் இல்லாமல் வியாபாரிகளை அப்புறப்படுத்தியது தவறு என தீர்ப்பு வழங்கியுள்ளது. எனவே நகராட்சி நிர்வாகமே காவல்துறை உதவியுடன் அப்புறப்படுத்தப்பட்ட சாலையோர வியாபாரிகளுக்கு அவர்கள் வியாபாரம் செய்த இடத்திலேயே கடைகள் அமைத்து கொடுக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மீண்டும் சாலையோர வியாபாரிகளை மே.15 அன்று சாலையோர வியாபாரிகளை முன்னறிவிப்பில்லாமல் அகற்றும் பணியில் இராமநாதபுரம் நகராட்சி நிர்வாகம் ஈடுபட்டதை தொடர்ந்து வியாழக்கிழமை அன்று இராமநாதபுரம் நகராட்சி அலுவலகம் முன்பாக சிஐடியு பொதுச் செயலாளர் எஸ்.கண்ணன் தலைமையில் முற்றுகை போராட்டத்தில் சாலையோர வியாபாரிகள் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் சிவகுரு பிரபாகரன் தலைமையில் சமரச பேச்சு வார்த்தை நடைபெற்றது. அதில் நேரில் சென்று ஆய்வு செய்த பிறகு மீண்டும் சாலையோர வியாபாரிகளுக்கு உரிய இடத்தை ஒதுக்கி தருவதாக உறுதி அளித்தார். இந்த முற்றுகை போராட்டத்தில் சிஐடியு மாவட்ட செயலாளர் எஸ்.ஏ.சந்தானம், மாவட்டத் தலைவர் எம்சிவாஜி, மாவட்ட பொருளாளர் வி.பாஸ்கரன், சாலையோர வியாபாரிகள் சங்க மாவட்ட செயலாளர் இரா.முத்துவிஜயன், சிபிஎம் மாவட்டச் செயலாளர் ரெ.குருவேல், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.காசிநாததுரை, எம்.ராஜ்குமார், தி.இராஜா, முறைசாரா தொழிலாளர் சங்க மாவட்ட பொருளாளர் பசலை நாகராஜ், சாலையோர வியாபாரிகள் சங்க மாவட்டத் தலைவர் வி.ஆலடி ஈஸ்வரன், மாவட்ட பொருளாளர் என்.பி.செந்தில் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.




You must be logged in to post a comment.