03 July 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » மேட்டுப்பாளையத்தில் இந்தியன் ரயில்வே சார்பில் நடைபெற்ற உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு.!

மேட்டுப்பாளையத்தில் இந்தியன் ரயில்வே சார்பில் நடைபெற்ற உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு.!

எழுதியவர்: Baker BAker June 5, 2026, 4:37 pm

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம்: உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு இந்தியன் ரயில்வே சார்பில் மேட்டுப்பாளையத்தில் விழிப்புணர்வு பேரணி மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

ரயில்வே சுகாதார ஆய்வாளர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ரயில்வே பாதுகாப்பு படை (RPF) வீரர்கள், ரயில்வே ஊழியர்கள் மற்றும் பல்வேறு பிரிவு பணியாளர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.

பேரணியின் போது சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியம், தூய்மை பேணுதல், பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைத்தல், மரக்கன்றுகள் நடுதல் மற்றும் சுற்றுப்புற சுகாதாரத்தை மேம்படுத்துதல் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும், தூய்மையான மற்றும் பசுமையான இந்தியாவை உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்ற உறுதிமொழியும் பங்கேற்பாளர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இந்த நிகழ்விற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மேட்டுப்பாளையம் ரயில்வே நிர்வாகம் செய்திருந்தது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!