03 July 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருவாடானை கைலாச விநாயகர் ஆலயத்தில் சங்கடகர சதுர்த்தி சிறப்பு அபிஷேகம்.!

திருவாடானை கைலாச விநாயகர் ஆலயத்தில் சங்கடகர சதுர்த்தி சிறப்பு அபிஷேகம்.!

எழுதியவர்: Baker BAker June 5, 2026, 12:19 pm

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, திருவாடானை பெரிய கோயில் முன்புறம் அமைந்துள்ள ஆறாம் மண்டகப்படி மண்டபத்தில் உள்ள ஸ்ரீ கைலாச விநாயகர் ஆலயத்தில் சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

விழாவையொட்டி, விநாயகப் பெருமானுக்கு மஞ்சள், பால், பன்னீர், தேன், திரவியப் பொடி, இளநீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டன. பின்னர் சுவாமி பல்வண்ண மலர்களால் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இந்த சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து விநாயகப் பெருமானின் அருளைப் பெற்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!