03 July 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருவாடானையில் அமைச்சர் உத்தரவை அலட்சியப்படுத்திய அதிகாரிகள்: தேங்கிக் கிடக்கும் கழிவுநீரால் பொதுமக்கள் கடும் அவதி.!

திருவாடானையில் அமைச்சர் உத்தரவை அலட்சியப்படுத்திய அதிகாரிகள்: தேங்கிக் கிடக்கும் கழிவுநீரால் பொதுமக்கள் கடும் அவதி.!

எழுதியவர்: Baker BAker June 5, 2026, 12:15 pm

ராமநாதபுரம் மாவட்டம்

திருவாடானை தொகுதிக்குட்பட்ட மீன் கடை மற்றும் வடக்குத் தெரு பகுதிகளில், ஊராட்சி நிர்வாகம் சார்பில் கட்டப்பட்ட வடிகால் கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால், கழிவுநீர் வெளியேற முடியாமல் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் கடுமையான சுகாதாரச் சீர்கேடு நிலவி பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

சில தினங்களுக்கு முன்பு, இந்தப் பகுதியை பார்வையிட்ட சுற்றுச்சூழல் துறை அமைச்சர் வி.கே. ராஜீவ், மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடங்களில் கழிவுநீர் தேங்கி அசுத்தமாக காணப்படுவதை நேரில் ஆய்வு செய்தார். உடனடியாக கால்வாய்களை தூர்வாரி சுத்தம் செய்யவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் அமைச்சர் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பல நாட்கள் கடந்தும், இதுவரை எந்தவிதமான தூர்வாரும் பணிகளும் நடைபெறவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். கால்வாய்கள் சுத்தம் செய்யப்படாததால் கழிவுநீர் தொடர்ந்து தேங்கி, துர்நாற்றம் மற்றும் கொசுத்தொல்லை அதிகரித்துள்ளது. இதனால் டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

“அமைச்சரின் உத்தரவே இப்படி அலட்சியப்படுத்தப்படுவது அதிர்ச்சி அளிக்கிறது” எனக் கூறும் மக்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அரசியல் மற்றும் நிர்வாக காரணங்களை ஒதுக்கி விட்டு உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்றி, கால்வாய்களை சுத்தம் செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

திருவாடானை பகுதியில் நிலவும் இந்த சுகாதாரச் சிக்கலுக்கு விரைவில் நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!