கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சி பகுதிக்குட்பட்ட அரசு மற்றும் நகராட்சி பள்ளிகளில் தமிழக அரசின் முதல்வரின் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், நகராட்சி ஆணையாளர் அமுதா நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின்போது மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்ட காலை உணவை அவர் நேரடியாக சுவைத்து அதன் தரம், சுவை மற்றும் ஊட்டச்சத்து அம்சங்களை பரிசோதித்தார். மேலும், உணவு தயாரிப்பு செயல்முறைகள் தரமான முறையில் நடைபெறுகிறதா என்பதை உறுதி செய்தார்.
ஒருங்கிணைந்த சமையல் கூடங்களில் உணவு தயாரிப்பு நடைபெறும் விதம், தூய்மை மற்றும் சுகாதார நடைமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதையும் அவர் பார்வையிட்டார். உணவு தயாரிப்பு மற்றும் விநியோகத்தில் சுகாதார தரநிலைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
மேலும், பள்ளிகளில் மாணவர் வருகை பதிவேடுகள், காலை உணவு பெறும் மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் தொடர்புடைய புள்ளிவிவரங்களையும் ஆய்வு செய்தார். திட்டத்தின் பயனாளர்கள் சரியாக அடையாளம் காணப்பட்டுள்ளனரா என்பதையும் அவர் சரிபார்த்தார்.
காலை உணவு மாணவர்களுக்கு சரியான நேரத்தில் வழங்கப்படுகிறதா என்பதையும் உறுதி செய்த அவர், இத்திட்டம் மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கும் உடல்நலத்திற்கும் முக்கிய பங்காற்றுவதாக தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது நகராட்சி அதிகாரிகள், பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் திட்டப் பணியாளர்கள் உடனிருந்தனர்.




You must be logged in to post a comment.