கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் ஓடந்துறையில், முத்தமிழ் அறிஞர், தலைவர் கலைஞர் அவர்களின் 103வது பிறந்தநாளை முன்னிட்டு நகர இளைஞர் அணி சார்பில் சிறப்பு விழா நடைபெற்றது.
நகர இளைஞர் அணி அமைப்பாளர் சேட் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், முன்னாள் நகர செயலாளர் சி.மு. முகமது யூனூஸ் முன்னிலை வகித்தார்.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மாநில விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளருமான பா. அருண்குமார் சிறப்புரையாற்றினார்.
தலைவர் கலைஞர் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டதுடன், கேக் வெட்டியும், இனிப்புகள் வழங்கியும் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் . ஹக்கீம் இனிப்புகள் வழங்கி நிகழ்வை சிறப்பித்தார்.
இவ்விழாவில் நகர திமுக மூத்த முன்னோடிகள், மாவட்ட நிர்வாகிகள், நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் இளைஞர் அணி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நிகழ்ச்சியின் இறுதியில், நகர இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் மணி, சதீஷ், மோகன், அசாருதீன் மற்றும் மு. அகமது சபீக் நன்றியுரை ஆற்றினர்.




You must be logged in to post a comment.