03 June 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » ராமநாதபுரத்தில் தவெக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா.!

ராமநாதபுரத்தில் தவெக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா.!

எழுதியவர்: Baker BAker June 3, 2026, 5:28 pm

தமிழக வெற்றி கழகத் தலைவரும் மாண்புமிகு தமிழக முதல்வருமான ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, கழக பொதுச்செயலாளர் அவர்களின் ஆலோசனையின்படி, இராமநாதபுரம் கிழக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்காக கோடைகால நீர்மோர் பந்தல் திறந்து வைக்கப்பட்டு வருகிறது

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்னும் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் பல்வேறு தரப்பினரும் பொதுமக்களுக்கும் பாதசாரிகளுக்கும் வெயிலின் தாக்கத்தை குறைக்கும் விதமாக நீர்,மோர் வழங்கியும் வருகின்றனர்

அதன் அடிப்படையில் இன்று ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் பேருந்து நிலையப் பகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் நீர்மோர், பந்தல் திறப்பு விழா நடைபெற்றது

இதனை மாவட்ட வர்த்தக அணி நிர்வாகி எஸ்.சுபா மற்றும் நிர்வாகி விக்னேஷ் இவர்களின் ஏற்பாட்டில் தயார் செய்யப்பட்டிருந்த நீர் மோர் பந்தலை தவெக கிழக்கு மாவட்டக்கழக செயலாளர் மலர்விழி ஜெயபாலா ரிப்பன் வெட்டி துவங்கி வைத்து பொதுமக்களுக்கு வழங்கினார்

பேருந்து நிலையம் சென்ற பொதுமக்கள் மற்றும் பாதசாரிகள் நவ பாசன கடற்கரைக்கு வரும் பக்தர்கள் உள்ளிட்டோருக்கு நீர் மோர், வெள்ளரிக்காய், தர்பூசணி, ஆரஞ்சு ஜுஸ் உள்ளிட்டவைகளை அண்டா அண்டாவாக வழங்கினர் இது இன்று முதல் தொடர்ந்து செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்த விழாவில் தமிழக வெற்றிக்கழகத்தின் மீனவர் அணி இளைஞர் அணி நிர்வாகிகள் மற்றும் மாநில மாவட்ட ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகள் தவெக தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்…

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!