03 June 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விளாசிய ஆ.ராசா!

கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விளாசிய ஆ.ராசா!

எழுதியவர்: Askar June 3, 2026, 8:32 am

கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விளாசிய ஆ.ராசா!

தமிழ்நாட்டிற்கு நான் தான் தலைவர் எனக் கூற விஜய்க்கு எந்தத் தகுதியும் இல்லை. உங்களை வேண்டாம் என்று 65% பேர் நிராகரித்துள்ளனர் என்பதை விஜய் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். முதல்வர் நாற்காலிக்கான மரியாதையை விஜய் குறைத்துக்கொள்ளக் கூடாது என திமுக எம்பி ஆ.ராசா கூறியுள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்.பி. ஆ. ராசா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,” 717 டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டு, மனமகிழ் மன்றத்தில் மது விற்கப்படுவதாக வீடியோக்கள் வெளியாகிறது. தற்போது நடக்கும் குற்றங்களுக்கு முந்தைய அரசு எப்படி காரணமாகும்?

என்கிட்ட இவ்ளோ கேள்வி கேக்குறீங்களே முதலமைச்சரிடம் ஏன் கேட்க மாட்றீங்க. கை கால் எல்லாம் ஆட்டி பேசுறீங்களே, சட்டமன்றத்தில் எங்க போச்சு உங்க BODY LANGUAGE..ஏன் PRESS -அ பாக்காம போறீங்க. கூட்டணி அமைத்து ஆட்சி அமைப்பது தொடா்பாக எங்கள் தலைவா்கள் யாரும் அதிமுகவிடம் பேசவில்லை.

மின்சாரம் கட் ஆகிறது விஜய் ப்ரோ, தூக்கம் வரல ப்ரோ, ஏதேனும் முடிவு எடுங்க ப்ரோ.தவெக 2ஆம் கட்ட தலைவா்களை போல் பேசுகிறாா் முதல்வா் விஜய். பிரதமர் நரேந்திர மோடிக்கு முன்னால் உங்கள் சக்தி என்னவானது விஜய் bro? எங்களை தீய சக்தி, தீய்ந்து போன சக்தி என விமா்சித்தீா்களே bro, பிரதமருக்கு முன்னால் உங்கள் சக்தி என்னவானது? திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசியதை ஏன் எதிா்க்கவில்லை விஜய் bro?

மதம் பார்க்க மாட்டோம் என்றார் முதல்வர், கை, நெற்றியில் ஒரு மதம், பதவியேற்ற போது ஜோசப் விஜய் என ஒரு மதம். தற்போதைய சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கு முந்தைய அரசை எப்படி முதலமைச்சர் விஜய் குறைகூற முடியும்? திருச்சியில் பேசிய முதலமைச்சர் விஜய்க்கு வீர வசனம் எழுதித்தந்தது யார்? பிரதமர் மோடியை 10 நிமிடங்கள் மட்டுமே சந்தித்த முதலமைச்சர் விஜய் அவருடன் என்ன பேசினார் என்பதைக் கூறாதது ஏன்? மற்றவர்களை எல்லாம் அல்லு சில்லு என்று மேடையில் பேசுகிறார்.

ஆனால், அந்த அல்லு சில்லுகளின் வீடுகளுக்குச் சென்று அவர்களின் ஆதரவை வாங்கியது அரசியலா? தில்லுமுள்ளா? முதல்வர் விஜய்க்கு அரசியல் புரிதல் இல்லை. எனக்கு நல்லா வார்த்தை வந்துவிடும் என்கிறார்? இது ஒரு முதலமைச்சர் பேசக்கூடிய முறையா? நிர்வாகத்தைதான் 6 மாதங்களுக்கு விமர்சிக்க மாட்டோம் எனக் கூறினோம். ஆட்சியில் நடக்கும் அசம்பாவிதங்களை அல்ல. காவல் துறை உங்கள் கட்டுப்பாட்டில்தானே உள்ளது. குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க வேண்டியதுதானே?

சட்டம் – ஒழுங்கை சரி செய்வதில் முதலமைச்சருக்கு என்ன பிரச்னை? செய்தியாளரை சந்திக்க ஏன் மறுக்கிறீர்கள்? திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்தது குறித்து எப்போது பேசுவீர்கள்? பக்ரீத் தீர்ப்பு விவகாரத்தில் என்ன நிலைப்பாடு தவெக அரசு எடுத்துள்ளது. மும்மதங்களுக்கும் உரியவராக விஜய் தன்னை முன்னிலைப்படுத்துகிறார். ஆனால் இவற்றிற்கு எதிராக குரல் எழுப்பமாட்டார்.. ஆர்பிஐ அனுமதி இல்லாமல் விவசாயக் கடனை தள்ளுபடி செய்ய முடியாது. இது கூட தெரியாமல் தேர்தல் அறிக்கையை தயாரித்திருக்கிறீர்கள்.

திமுக கோடை காலத்தில் எவ்வளவு மின்சாரம் தேவைப்படும் என்பதை முன்கூட்டியே அறிந்து கூடுதல் மின்சாரத்தைப் பெற வேண்டும். மின்சாரம் துண்டிக்கப்பட்டால், திமுக காரணம் எனக் கூறுகிறீர்கள். தமிழ்நாட்டிற்கு நான் தான் தலைவர் எனக் கூற விஜய்க்கு எந்தத் தகுதியும் இல்லை. உங்களை வேண்டாம் என்று 65% பேர் நிராகரித்துள்ளனர் என்பதை விஜய் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். முதல்வர் நாற்காலிக்கான மரியாதையை விஜய் குறைத்துக்கொள்ளக் கூடாது” என அவர் பேசினார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!