ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை சதக்கத்துன் ஜாரியா நடுநிலைப்பள்ளியில் இடைநிலை ஆசிரியர் செய்யதலி பாத்திமா அவர்களின் பணிநிறைவு பாராட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.
விழாவிற்கு பள்ளித் தலைமை ஆசிரியர் மு. அருட்செல்வி அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். கல்விக்குழுத் தலைவர் ஜனாப் ஷேக் உசேன், பள்ளித் தாளாளர் பிலால் அப்துல்லா, பொருளாளர் ஜனாப் ஜமால் அஷ்ரப், நிர்வாக அலுவலர் ஜனாப் செய்யது இப்ராகிம் ஆகியோர் கலந்து கொண்டு ஆசிரியரின் கல்விப் பணியைப் பாராட்டிப் பேசினர். ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களும் விழாவில் பங்கேற்றனர்.
இவ்விழாவில், அறிவியல் செயல் தூண்டும் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்ட மாணவன் அபினேஷ் அவர்களுக்கு கேடயமும் பாராட்டும் வழங்கப்பட்டது. மேலும், தேசிய திறனாய்வுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் யுவஶ்ரீ, அல்ஃபத் ரஹ்மான், யாஷினி ஶ்ரீ, நகுல் தேவன் மற்றும் மோனிகா ஆகியோருக்கும் கேடயங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
மாணவர்களை அறிவியல் செயல் தூண்டும் விருது மற்றும் தேசிய திறனாய்வுத் தேர்வில் சாதனை படைக்க ஊக்குவித்த ஆசிரியர்கள் . இந்திராகாந்தி மற்றும் கவிப்பிரியா ஆகியோரும் பாராட்டப்பட்டனர்.
இறுதியாக, பணிநிறைவு பெறும் ஆசிரியர் செய்யதலி பாத்திமா அவர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டு, அனைவரின் வாழ்த்துகளுடன் விழா இனிதே நிறைவுற்றது.




You must be logged in to post a comment.