ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் எஸ்டிபிஐ கட்சியின் நகர் செயற்குழு கூட்டம் நகர் தலைவர் முகமது ஜலீல் தலைமையில் நடைபெற்றது. நகர் செயலாளர் கீழை அஸ்ரப் வரவேற்புரை ஆற்றினார்.
சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாவட்ட அமைப்பு பொதுச் செயலாளர் ஜெமீல், கட்சியின் கட்டமைப்பு விரிவாக்கம் மற்றும் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் அதிகமான இடங்களில் போட்டியிடுவது குறித்து விரிவாக விளக்க உரையாற்றினார்.
மாவட்ட துணைத் தலைவர் ஜஹாங்கீர் அரூசி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் நூருல் ஜமான் மற்றும் தொகுதி செயலாளர் அக்பர் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:
கீழக்கரையில் வள்ளல் சீதக்காதி சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகள் மற்றும் அனைத்து தெருக்களிலும் சுற்றித் திரியும் வெறிநாய்களை உடனடியாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாதியில் நிறைவடைந்துள்ள கீழக்கரை அரசு மருத்துவமனை புதிய கட்டிடப் பணிகளை துரிதப்படுத்தி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
புது கிழக்குத் தெருவில் அமைந்துள்ள ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தை புதுப்பித்து மீண்டும் மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
தொற்றுநோய் பரவும் அபாயம் இருப்பதால் அனைத்து வார்டுகளிலும் கிணறுகளில் மருந்து ஊற்றவும், கொசு ஒழிப்பு பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இக்கூட்டத்தில் மாவட்ட ஊடகப்பிரிவு தலைவர் சுபைர், தொகுதி துணைத் தலைவர் தாஜுல் அமீன், செயற்குழு உறுப்பினர் பக்ருதீன் அலி, துணைத் தலைவர் ஹாஜா அலாவுதீன், பொருளாளர் கலீல் ரஹ்மான், இணை செயலாளர்கள் பாரூக் ராஜா, முஹம்மது ஹமீது பைசல், செயற்குழு உறுப்பினர் அகமது நதீர், செயல்வீரர்கள் யூசுப், நெய்னா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.




You must be logged in to post a comment.