ஒரு தேர்தல் -பல பாடங்கள்..
தமிழக தேர்தல் முடிவுகளுக்கு பிறகான சூழல்களில் ஒரு நடுநிலையான ஆய்வு!
பாடம்-4
ஒரு மனிதர் உயர்ந்த நிலையை அடைய ஆசீர்வதிக்கப்படும் போது, அவர் அறிந்தோ, அறியாமலோ, திட்டமிட்டோ, திட்டமிடாமலோ வெற்றிக்கோட்டை நோக்கி நகருகிறது அவரது வாழ்க்கை. விஜய் ஒரு சினிமா நடிகராக உருவாக அவரின் குடும்ப சூழல் ஒரு காரணம். டைரக்டர் S.A சந்திரசேகர் பாடகி ஷோபா இவர்களின் திரையுலக பின்புலங்களால், விஜய் 1984 ஆம் ஆண்டே குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் கால் பதித்தார்.
1992 ஆம் ஆண்டு தனது தந்தையின் இயக்கத்தில் ஒரு படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
பிறகான காலங்களில் அவரது சினிமா வாழ்க்கை தொய்வாக இருந்தாலும்,
1996-2002 காலகட்டங்களில்,
“பூவே உனக்காக ” “காதலுக்கு மரியாதை ” “லவ் டுடே” “துள்ளாத மனமும் துள்ளும்” “குஷி” “ஃப்ரெண்ட்ஸ்”
போன்ற மெகா ஹிட் படங்கள் பெண்களை பெரிதும் கவர்ந்தன.
“திருமலை” ” கில்லி
“திருப்பாச்சி” “சிவகாசி “போக்கிரி”
“வேலாயுதம்” போன்றவற்றில் சில படங்கள், பிளாக்பஸ்டர் (BlockBuster)
வெற்றியை பெற்று இளைஞர்களின் கனவு நாயகனாக விஜய் உருவானார்.
“துப்பாக்கி” ” கத்தி”
“மெர்சல்” “சர்கார்”
“பிகில்” “மாஸ்டர்”
“லியோ” போன்ற படங்கள் உலக அளவில் வசூல் சாதனை படைத்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து விஜய் சினிமா மொழியில் பாக்ஸ் ஆபீஸ் மன்னனாக கட்டமைக்கப்பட்டார். இவரது படங்களில் இவருக்காக உருவாக்கப்பட்ட”பன்ச் டைலாக் வசனங்கள்” சிறிய குழந்தைகள் மனதில் பதிந்தது. அவரே பாடிய துள்ளலான பாடல்கள், சண்டைக்காட்சிகள், நடனம் என ஒரு மாஸ்டர் ஹீரோ வாக உருவாக்கப்பட்டு
“இளைய தளபதி”
“தளபதியாக” உருவானபோது சினிமா உலகம், அவர் வசப்பட்டதுபோல, குழந்தைகள், இளைஞர்கள், இளம்பெண்கள் என மிகப்பெரும் ரசிகர்பட்டாளத்தை மிகச்சரியாக உருவாக்கி கொண்டார். விஜய் நடிப்பில் வெளியான கடைசி படமான “தி கோட்”
(The greatest of all times- GOAT) அவரது 68 ஆவது படமாக வெளிவந்து பிரமாண்டமான வெற்றி பெற்றது. அவரது அரசியல் வாழ்க்கைக்கு முன் நடித்து வெளிவராத பல சர்ச்சைகளுக்கு உட்படுத்தப்பட்ட “ஜனநாயகன்”படம் 69 ஆவது படமாக அமைந்து அதோடு நடிப்பிற்கு விடை கொடுத்தார். படங்களில் அவரது சம்பளம் 200 கோடி முதல் 275 கோடி வரை பெற்றதாகக் கூறப்படுகிறது. அவரது தேர்தல் பிராமணப்பத்திரப்படி, அவருக்கு அசையும் மற்றும் அசையா சொத்துக்களாக 520 கோடி உள்ளதாகக் கூறப்படுகின்றது.
வழக்கமான ரசிகர்கள் மன்றங்களை மிக கவனமாக “விஜய் மக்கள் இயக்கம் “
என்று உருவாக்கி, ரசிகர்கள் என்ற நிலையில் இருந்து சமூக சேவகர்கள் என்ற நிலையை விஜய் உருவாக்கினார்.
விஜய் அவர்களின் வளர்ச்சியை அவரின் திட்டமிடலை, சமூக மற்றும் அரசியல் நோக்கிய நகர்வுகளை புரிந்து கொள்ளவே அவரின் திரைத்துறை வளர்ச்சியை பற்றி மேலோட்டமாக குறிப்பிட்டுள்ளேன்.
தொடர்ந்து உரையாடுவோம்..!
கப்ளிசேட்




You must be logged in to post a comment.