தமிழக சமூகநலத்துறையின் மூலம் 2026-ஆம் ஆண்டிற்கான சுதந்திர தினவிழாவை முன்னிட்டு “சிறந்த சமூக சேவகர்” மற்றும் “சிறந்த தொண்டு நிறுவனம்” விருதுகளுக்கு தகுதியான நபர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பெண்களின் நலன் மற்றும் சமூக முன்னேற்றத்திற்காக சிறப்பாக பணியாற்றும் சமூக சேவகர்கள் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தொண்டு நிறுவனங்கள் இந்த விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர்கள் தமிழகத்தில் பிறந்தவராகவும், 18 வயது நிரம்பியவராகவும் இருக்க வேண்டும். மேலும் குறைந்தது 5 ஆண்டுகள் சமூகநலம், பெண்கள் முன்னேற்றம், மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் உள்ளிட்ட துறைகளில் சிறப்பாக மற்றும் தொடர்ந்து சேவை செய்து வருபவர்களாக இருக்க வேண்டும்.
தொண்டு நிறுவனங்கள் அரசு அங்கீகாரம் பெற்றதாக இருக்க வேண்டும். சமூக சேவை தொடர்பான முழு விவரங்கள், நிழற்படங்கள், பெற்ற விருதுகள் குறித்த தகவல்கள், பிறந்த தேதி, கல்வித் தகுதி உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்களை ஜூன் 19-ஆம் தேதிக்குள் https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து, மாவட்ட ஆட்சியரகத்தில் செயல்படும் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் கருத்துருவினை சமர்ப்பிக்கலாம்.
இத்தகவலை மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.




You must be logged in to post a comment.