26 May 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருவாடானையில் வைகாசி விசாக திருவிழா: பக்தர்கள் பக்தி பரவசம்.!

திருவாடானையில் வைகாசி விசாக திருவிழா: பக்தர்கள் பக்தி பரவசம்.!

எழுதியவர்: Baker BAker May 26, 2026, 10:18 pm

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகாவில் அமைந்துள்ள 1000 ஆண்டுகள் பழமையான அருள்மிகு சினேகவள்ளி தாயார் சமேத ஆதிரெத்தினேஸ்வரர் திருக்கோவிலில் நடைபெற்று வரும் வைகாசி விசாக திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.

10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவின் 5ம் நாள் நிகழ்ச்சி பக்தி மிகு ஆன்மிக சூழலில் நடைபெற்றது. இதில் அருள்மிகு ஆதிரெத்தினேஸ்வரர் பிரியாவிடையுடன் யானை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மேலும் சினேகவள்ளி அம்மன் காமதேனு வாகனத்திலும், முருகப்பெருமான் மயில் வாகனத்திலும், விநாயகர் மூஞ்சூறு வாகனத்திலும் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வந்து பக்தர்களை தரிசனம் வழங்கினர்.

இந்நிகழ்வில் 22½ நாட்டார்கள் கலந்து கொண்டு அலங்கரிக்கப்பட்ட சுவாமி வாகனங்களை வீதி உலாவாக இழுத்து வந்தனர். வழிநெடுகிலும் திரண்டிருந்த பக்தர்கள் பூஜைகள் செய்து, தீபாராதனை காண்ந்து பக்தி பரவசத்துடன் வழிபட்டனர்.

திருவாடானை நகரம் முழுவதும் திருவிழா கோலாகலமாக காட்சியளித்ததுடன், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!