26 May 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருவாடானை அருகே கருப்பர் கோவில் திருவிழா விவகாரம் .! இருதரப்பினர் மோதல்.!!

திருவாடானை அருகே கருப்பர் கோவில் திருவிழா விவகாரம் .! இருதரப்பினர் மோதல்.!!

எழுதியவர்: Baker BAker May 26, 2026, 10:16 pm

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகாவிற்கு உட்பட்ட முள்ளிமுனை கிராமத்தில் நடைபெறவுள்ள கருப்பர் கோவில் திருவிழாவை முன்னிட்டு, வரி வசூல் மற்றும் சாமி கும்பிடும் உரிமை தொடர்பாக இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக திருவாடானை தாலுகா அலுவலகம் வளாகத்தில் வட்டாட்சியர் முன்னிலையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பேச்சுவார்த்தையின் போது இருதரப்பினருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டதால் மோதல் சூழல் உருவானது.

தகவல் அறிந்ததும் தமிழ்நாடு காவல்துறை சார்ந்த தொண்டி மற்றும் திருவாடானை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கூட்டத்தைக் கலைத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த சம்பவத்தால் தாலுகா அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!