ஒரு தேர்தல் – பல பாடங்கள்..!
தமிழக தேர்தல் முடிவுகளுக்கு பிறகான சூழல்களில் ஒரு நடுநிலையான ஆய்வு!
பாடம்-3
விஜய் அவர்களின் வெற்றி வெளிப்படையாக ஆச்சரியமாக இருந்தாலும், அதற்கான திட்டமிடல்கள் சில ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வந்தன.
உழைப்பில்லாமல், திட்டமில்லாமல், திடீரென உயர்நிலையை ஒருவர் அடைந்து விட முடியாது.
விஜய் அவர்களின் திட்டமிடல்கள் துல்லியமாக இருந்திருக்கிறது.
எப்போதும் அரசியல் கட்சிகளின் அரசியலை மட்டுமே பார்த்து வந்த அரசியல் கட்சிகள், விஜய் அவர்களின் வளர்ச்சியை கவனிக்க தவறின.
எப்போதும் போல ஒரு நடிகரின் ரசிகர் கூட்டம் என்று எளிதாக எடுத்துக் கொண்டன. கட் அவுட் வைக்கிறார்கள். பால் அபிஷேகம் செய்கிறார்கள். முதல் காட்சிகளை சட்டை கிழிய டிக்கெட் எடுத்து பார்க்கிறார்கள்.
இதுபோன்ற ஒரு கூட்டத்தால் அரசியல் என்பதையெல்லாம் நினைத்தே பார்க்க முடியாது என்று அலட்சியமாக கடந்துவிட்டார்கள்.
இணைய வெளிகளின் எல்லையற்ற உலாவல்கள், வரைமுறையற்ற பகிர்தல்கள், உறவுகள், நெருக்கங்கள்,
நினைத்ததை உருவாக்கித் தரும் நவீன தொழில்நுட்பங்கள், என எளிதாக கிடைத்த எல்லாம் சேர்ந்து ஏதோ ஒன்றை அவர்களை தேடத் தூண்டியது.
எல்லாவற்றிலும் புதுமையையும், புரட்சியையும், கைசுண்டும் நேரத்தில் நினைத்தது சாத்தியமாக வேண்டும் என்றெல்லாம் மனநிலைகள் உருவாகி விட்டது.
2000 க்குப்பிறகு பிறந்த Gen C தலைமுறையினரின் மன உணர்வுகளோடு 40/50 வயதை கடந்தவர்களால் ஒன்றிப்போக முடியவில்லை. இது மிகப்பெரிய தலைமுறை இடைவெளியாக (Generation Gap) ஆக மாறி சமூகத்தில் மிகப்பெரிய தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய இளைஞர்கள் பழைய முகங்களை ஏற்க தயாரில்லை.
இளைஞர்களின் இதுபோன்ற மனநிலையை பேசாமல், ஏற்காமல், ஆராயாமல் இன்று எந்தத் துறையையும் பேச முடியாது.
இதில் அரசியல் மட்டும் விதிவிலக்கல்ல. எல்லாத் துறைகளிலும் வெற்றிபெற நினைக்கிற இளைஞர்கள்,
அது நிஜத்தில் நடைபெறாத போது அதை இன்றைய வரமாக அமைந்திருக்கிற Reels ,Memes என்று தங்களை தங்களின் திறமைகளை வெளிப்படுத்துகிறார்கள்.
இதுபோன்ற நிலைகளில் ஏற்படும் தோல்விகளால், மன அழுத்தங்கள் (Mental Depression) ஏற்பட்டு சரியான வழிகாட்டல்கள் கிடைக்காதபோது, தற்கொலைகளை நோக்கி நகரும் அவலமும் நிகழ்கிறது.
அதனால்தான் இணையத்தில் துவங்கிய ஒரு கட்சியை தலைவர் யார்? அவர்களின் பின்னணி என்ன? என்ற எந்த தேடலும் புரிதலும் இல்லாமல் பல லட்சம் Followers உருவானார்கள்.
இதன் பிரமாண்டமான Followers எண்ணிக்கையை பார்த்து GEN C இளைஞர்கள் சார்பில், “தேசிய ஒட்டுண்ணி முன்னணி” என்ற புதிய ஆன்லைன் கட்சி துவங்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற புதிய தேடல்களுக்கான ஒரு பிம்பமாக(Image) விஜய் கட்டமைக்கப்பட்டார் அல்லது உருவாக்கப்பட்டார்.
தொடர்ந்து உரையாடுவோம்…!
கப்ளிசேட்




You must be logged in to post a comment.