வத்தலக்குண்டுவில் 25 ஆண்டுகளுக்கு பிறகு படித்த பள்ளியில் ஒன்றாக சந்தித்து முஸ்தபா, முஸ்தபா, பாடல் பாடி நெகிழ்ந்த மாணவிகள்.
வத்தலக்குண்டு அரசு உதவி பெறும் மகாலட்சுமி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், 25 ஆண்டுகளுக்கு பிறகு படித்த மாணவிகள், ஞாயிற்றுக்கிழமை ஒன்றாக சந்தித்து முஸ்தபா, முஸ்தபா, பாடல் பாடி நெகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அரசு உதவி பெறும் மகாலட்சுமி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1995 முதல் 2001-ம் ஆண்டில், 6 முதல் 12-வரை ஒன்றாக படித்த 60-க்கு மேற்பட்ட மாணவிகள் தங்களுக்கு பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியர்களுடன் 25 ஆண்டுகளுக்குப் பிறகு அதே பள்ளியில் ஒன்றாக சங்கமித்தினர்.
சென்னையில் பணியாற்றும் வணிகத்துறை ஆணையர் முன்னாள் மாணவி அன்பு தமிழரசி, சென்னையில் பணியாற்றும் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் விஜயலட்சுமி மற்றும் டாக்டர், காவல்துறை உள்பட சாதனை புரிந்த மாணவிகளையும் குடும்ப தலைவியாக திகழும் மாணவிகளையும் மற்றும் பொறியாளர்கள், ஆசிரியர்கள் அனைவரையும் முன்னாள் ஆசிரியர்கள் பாராட்டினர்.
தாங்கள் படித்த வகுப்புகளை சுற்றி பார்த்து பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். ஆசிரியர்களுடன் அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இந்த சந்திப்பில், முஸ்தபா, முஸ்தபா., டோண்ட் வொர்ரி முஸ்தபா என்ற பாடலை அனைவரும் ஒன்றாக ஆடி, பாடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
திண்டுக்கல், தேனி, மதுரை, கோவை, சென்னை மற்றும் கர்நாடகா, கேரளா, பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவிகள் பங்கேற்றனர்.
தாங்கள் படிக்கும்போது தங்களுக்கு பயிற்றுவித்த பள்ளி ஆசிரியர்களை பெருமைப்படுத்தும் விதமாக மாணவிகள் திரண்டு வரவேற்பு அளித்தனர். மேலும்
பள்ளியின் செயலாளர் ராமதாஸ் மற்றும் பள்ளி குழுத் தலைவர் பாலகிருஷ்ணன் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் செல்வராணி அவர்களை அழைத்து வரப்பட்டு பொன்னாடை அணிவித்தும் நினைவு பரிசு வழங்கியும் கௌரவப்படுத்தப்பட்டனர்.
பின்னர் மாணவிகள் தங்கள் பள்ளியில் படித்த நினைவுகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டு மகிழ்ச்சி அடைந்தனர். தன்னுடன் படித்த தோழிகளுடன் செல்பி எடுத்துக்கொண்டு மகிழ்ந்தனர். பழைய நினைவுகளை ஞாபகப்படுத்தும் நினைவாக ஆசிரியர் வருகை பதிவேடு எடுத்தனர். இதனை மாணவிகள் உள்ளேன் அம்மா என்று கூறிய மாணவிகளிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
ஆசிரியர்கள் படிக்கும்போது மாணவிகளுக்கு தேர்வு வைத்தனர். ஆனால், இன்று மாணவிகள் வந்திருக்கும் தங்களது ஆசானுக்கு தேர்வு வைத்து வெற்றி பெற்றவளுக்கு பரிசுகள் வழங்கினர். இந்த நிகழ்ச்சி மாணவிகள் மற்றும் ஆசிரியர்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.




You must be logged in to post a comment.