25 May 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » ஒரு தேர்தல்- பல பாடங்கள்..!

ஒரு தேர்தல்- பல பாடங்கள்..!

எழுதியவர்: Askar May 25, 2026, 8:15 am

ஒரு தேர்தல்- பல பாடங்கள்..!

தமிழக தேர்தல் முடிவுகளுக்கு பிறகான சூழல்களில் ஒரு நடுநிலையான ஆய்வு!

‌ ‌‌பாடம் -2

கரப்பான்பூச்சியை கண்டாலே அலறி அடித்து ஓடும் பெண்கள் இருக்கிறார்கள்.

அவர்களுக்கு அது அவ்வளவு அருவெறுப்பானது அசூயையானது. அவர்களின் மனநிலையையே அது மாற்றி விடுகிறது.

சமீபத்தில் உச்சநீதிமன்றத்தில் மரியாதைக்குரிய இரண்டு நீதியரசர்கள், இந்தியாவில் வேலையில்லாமல் வேலை செய்யாமல் இருப்பவர்கள்,

கரப்பான் பூச்சி மற்றும் ஒட்டுண்ணிகள் என்று கூறியதை அடுத்து அமெரிக்காவில் படித்து கொண்டிருக்கும் அபிஜித் என்ற 30வயது இளைஞர் இணையத்தில் “Cochroch Janata party” என்ற கட்சியை துவங்குகிறார்.

மூன்றே நாளில் 80,000 பேர் அதில் சேர பதிவு செய்தனர். மேலும் நாள்தோறும் பல லட்சக்கணக்கான followers கள் அதனை பின்பற்ற துவங்கி தேசிய கட்சிகளை மிஞ்சி இருப்பது, விநோதம் என்பதைவிட இன்றைய இளைஞர்களின் மனநிலை எனலாம்.

கும்பல் மனோபாவத்தின் வெளிப்பாடாக, கரப்பான்பூச்சியை அறுவெறுப்பாக பார்க்கும் பெண்களும், பெயர் குறியீட்டை ஏற்றுக்கொள்வது ஆச்சரியம்.

அபிஜித் கொடுத்திருக்கிற ஐந்து வாக்குறுதிகள் மிகவும் வசீகரமாக இருக்கிறது.

அந்த பக்கம்(Page) தடைசெய்யப்பட்டு புதிதாக வேறு பக்கம் துவங்கி என இணைய வெளிகளில் டிரெண்டிங் ஆகி உள்ளது.

நான் சொல்ல வந்தது இன்றைய இளைஞர்களின் மனநிலை.

இளைஞர்களிடம் ஏராளமான திறமைகள் குவிந்து கிடக்கின்றன.

ஆனால் எதுவும் உடனடியாக (Instant) நிகழ்ந்து விட வேண்டும். எதைப்பற்றியும் கவலையில்லை.

பொறுமை இல்லை. வரலாறு தேவையில்லை. கலாச்சாரம் தேவையில்லை. அவர்களின் உறவுகள் வேர்களைப் பற்றிய எந்த புரிதலும் இல்லை.

எல்லாவற்றிலும் மாற்றம் வேண்டும். பழைய கதைகள் வேண்டாம். எதையும் சுருக்கமாக தெளிவாக சொல்ல வேண்டும் என்ற மனநிலை எல்லா இளைஞர்களிடமும் நிலவுகிறது.

எதிலும் பிடிப்பில்லாத ஒரு விட்டேத்தியான மனநிலை கொண்ட ஒரு சமூகம் உருவாகிறது.

அதிக உணர்ச்சி வசப்படுதல், ஏதாவது ஒன்றில் கரைந்து போகிற (Emotional reactions) மனநிலை என இளைஞர்களின் மனநிலைகளில் அதீத தீவிரத்தன்மை காணப்படுகிறது.

குறிப்பாக கணிணி, இணையம் சார்ந்த எந்த பணிகளையும் சவாலாக ஏற்று முடித்து விடுகிறார்கள்.

இந்த இளைஞர்களில் பல விதிவிலக்குகள் இருக்கலாம். ஆனால் இளைஞர்களின்பொதுவான மனநிலை இதுபோலவே இருக்கிறது.

இந்த மனநிலைக்கும் இன்றைய அரசியலுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா?

தொடர்ந்து உரையாடுவோம்..!

கப்ளிசேட்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!