சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில், திமுக பிரமுகரும் வழக்கறிஞருமான Dr. V.M. ஆசைத்தம்பி தலைமையில், திமுக உள்ளிட்ட பல்வேறு மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் இன்று டாக்டர் T.K. பிரபு முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
நிகழ்ச்சியில் புதிய உறுப்பினர்களுக்கு அமைச்சர் டாக்டர் T.K. பிரபு கட்சி துண்டு அணிவித்து வரவேற்பு அளித்தார். அதனைத் தொடர்ந்து, கட்சியில் இணைந்தவர்கள் அமைச்சருக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்வில் திமுக மாவட்ட வழக்கறிஞர் துணை அமைப்பாளர் வழக்கறிஞர் லட்சுமணன், திமுக ஒன்றிய துணை அமைப்பாளர் வழக்கறிஞர் ரம்யா, வழக்கறிஞர் ராஜசேகர், பாஜக மாவட்ட இளைஞரணி செயலாளர் சூர்யா, TMT Bus Transport நிறுவனத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்.
இந்த நிகழ்ச்சி தேவகோட்டை பகுதியில் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




You must be logged in to post a comment.