ஒரு தேர்தல் -பல பாடங்கள்..!
தமிழக தேர்தல் முடிவுகளுக்கு பிறகான சூழல்களில் ஒரு நடுநிலையான ஆய்வு!
பாடம்-1
இன்றைக்கு தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய புரட்சி நிகழ்ந்து இருக்கிறது.
மாண்புமிகு விஜய் அவர்களின் கட்சி பெரும்பான்மை பெறாத ஒரு சூழலில் ஆட்சி அமைத்திருக்கிறது.
எதிர்க்கட்சிகளும் ஆட்சி அமைக்க முடியாத சூழலில் எதிர் அணியின் கூட்டணி கட்சிகளே ஆதரித்து மேலும் கூட்டணி அரசாகவும் அமைந்திருக்கிறது.
இது அரசியல் களத்தில் ஒரு விநோதமான புதுமை.
எதிர் அணியின் கூட்டணிக் கட்சிகளே ஒரு கூட்டணி அரசில் பங்கேற்று இருப்பது புதுமை.
இன்றைக்கு மிகச் சாதாரணமான பலர் சட்டமன்ற உறுப்பினராக ஆகி உள்ளார்கள்.
இன்னும் பலர் அவர்களே ஆச்சரியப்படும் அளவிற்கு அமைச்சர்களாக பதவி ஏற்று உள்ளார்கள்.
த.வெ.க அமைச்சர் ஒருவர் கருத்து சொன்னது போல, முதியவர்களின் அவை இன்று இளைஞர்களின் அவையாக மாறி இருக்கிறது.
40 வயதிற்குட்பட்டு 11 அமைச்சர்கள் உள்ளனர். 40-50 வயதுகளில் பலர் இருக்கின்றனர்.
சட்டமன்ற உறுப்பினர்களில் பலர் இளைஞர்களாகவும் தவெக சட்டமன்ற உறுப்பினர்களின் சராசரி வயது 45 என்பது ஒருவகையில் மகிழ்ச்சிக்குரியது.
பெரும்பான்மையான ஊடகங்கள்,சமூக ஊடகங்கள் எல்லாமே விஜய் கட்சி 3/4 தொகுதிகளில் வெல்லலாம்.
விஜயேகூட போட்டியிடும் இரண்டு தொகுதிகளிலும் தோற்று விடுவார் என்றெல்லாம் ஆரூடம் கூறின.
கடைசி நேரத்தில் முன்னாள் IPS அதிகாரி ரவி அவர்கள் சொன்ன கணிப்பு ஏறக்குறைய அப்படியே நிகழ்ந்தது.
அது எதார்த்தமாக நிகழ்ந்ததா? அல்லது அவ்வளவு தெளிவாக அவர்களின் குழு கணித்ததா? என்ற உண்மையை அவர்தான் சொல்ல வேண்டும்.
கேயாஸ் தியரி (Chaos Theory ) என்று ஒரு தியரி இருக்கிறது. அதைப்போல தொடக்கத்தில் கணிக்க முடியாத அமைப்புகள்,
சில மாற்றங்கள் மூலம் கணிக்க முடியாத மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்துகின்றன.
பிரேசிலில் ஒரு வண்ணத்துப்பூச்சி தன் சிறகுகளை அசைப்பதால் ஏற்படும் காற்றோட்டம்,
அமெரிக்காவில் ஒரு சூறாவளியை ஏற்படுத்தும் என்ற இந்த கேயாஸ் தியரி நம்பும்படியாக இல்லை எனினும்,
இது உண்மை என்கிறார்கள் நிகழ்வுகளை கணிக்கும் Probability வல்லுநர்கள்.
இன்னும் இந்தியாவில் சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்ட Cochroch Janata party (CJP) கரப்பான் பூச்சி மக்கள் கட்சி இன்னொரு ஆச்சரியம்!
தொடர்ந்து உரையாடுவோம்!
கப்ளிசேட்




You must be logged in to post a comment.