தென்காசி மாவட்ட காவல்துறை சார்பாக 20.05.2026 முதல் மூன்று நாட்களாக ஆப்ரேஷன் “SHIELDNET” நடைபெற்று வருகிறது, அதன் ஒரு பகுதியாக மாவட்டம் முழுவதும் தீவிர குற்ற தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த தீவிர நடவடிக்கையின் மூலம் 138 குற்ற சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மற்றும் 1248 சந்தேக நபர்கள் சோதனை செய்யப்பட்டும், நீண்ட நாள் நிலுவையில் இருந்த 04 பிடியாணைகளை (NBW) நிறைவேற்றி, சாலை விதிமீறல்களில் ஈடுபட்ட 125 வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ஜாமீன் ரத்து நடவடிக்கைகளும் தீவிர படுத்தப்பட்டு வருகிறது.
மேலும் குற்றங்களை தடுக்கும் நோக்கில் தென்காசி மாவட்டம் முழுவதும் அனைத்து காவல் நிலைய பகுதிகளில் தொடர்ந்து தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்




You must be logged in to post a comment.