21 May 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஏர்வாடி தர்கா யாத்திரிகர்களை அசத்திய 9 ஆயிரம் கிலோ உணவு.!சமையல்கலை நிபுணர் புஹாரியின் கைப்பக்குவத்திற்கு பாராட்டு குவியல்.!!

ஏர்வாடி தர்கா யாத்திரிகர்களை அசத்திய 9 ஆயிரம் கிலோ உணவு.!சமையல்கலை நிபுணர் புஹாரியின் கைப்பக்குவத்திற்கு பாராட்டு குவியல்.!!

எழுதியவர்: Baker BAker May 21, 2026, 1:58 pm

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை கிழக்குத்தெருவை சேர்ந்த “சேகு தம்பி கேட்டரிங்” நிறுவனம் தனது தரமான சமையல் சேவையின் மூலம் மக்கள் மத்தியில் தனித்துவமான வரவேற்பைப் பெற்று வருகிறது.

முன்னாள் சமையல் மேஸ்திரி மர்ஹூம் எஸ் எம். சேகு தம்பி அவர்களின் மகனும், திறமையான சமையல்கலை நிபுணருமான எஸ் . புஹாரி தலைமையில் இந்த கேட்டரிங் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

திருமணம், நிச்சயதார்த்தம், சுன்னத் விழா, காதணி விழா உள்ளிட்ட வீட்டு அனைத்து விசேஷங்களுக்கும் சைவ மற்றும் அசைவ உணவுகளை சுவையுடனும் தரத்துடனும் சமைத்து வழங்கி வரும் இந்நிறுவனம், தற்போது மிகப்பெரிய சாதனையின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

உலகப் புகழ்பெற்ற ஏர்வாடி தர்கா கொடி இறக்க விழாவில், சுமார் 9 ஆயிரம் கிலோ உணவு யாத்திரிகர்களுக்காக தயாரிக்கப்பட்டது. இந்த பிரம்மாண்ட சமையல் பணியை சமையல்கலை நிபுணர் எஸ்.புஹாரி திறம்பட மேற்கொண்டார்.

யாத்திரிகர்களுக்கு தர்கா நிர்வாகத்தின் சார்பில் வழங்கப்பட்ட இந்த உணவு, சுவை மற்றும் தரத்தில் சிறப்பாக இருந்ததாக பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். குறிப்பாக, “இத்தனை பெரிய அளவில் சமைக்கப்பட்ட உணவு மிகவும் சுவையாக இருந்தது” என யாத்திரிகர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து அவருக்கு நிர்வாகத்தின் சார்பாக பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

சமையலில் அனுபவமும், சுவையில் தனித்துவமும் கொண்ட “சேகு தம்பி கேட்டரிங்” தற்போது கீழக்கரை மற்றும் சுற்றுவட்டார மக்களின் நம்பிக்கைக்குரிய கேட்டரிங் சேவையாக உருவெடுத்து வருகிறது.

 

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!