21 May 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருவாடானை எம்.எல்.ஏ வி.கே. ராஜீவ் அமைச்சராகப் பதவியேற்பு .! தவெக தொண்டர்கள் வெடி வெடித்து, இனிப்பு வழங்கி உற்சாகக் கொண்டாட்டம்.!!

திருவாடானை எம்.எல்.ஏ வி.கே. ராஜீவ் அமைச்சராகப் பதவியேற்பு .! தவெக தொண்டர்கள் வெடி வெடித்து, இனிப்பு வழங்கி உற்சாகக் கொண்டாட்டம்.!!

எழுதியவர்: Baker BAker May 21, 2026, 1:45 pm

திருவாடானை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.கே. ராஜீவ் அமைச்சராகப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, தொகுதியின் பல்வேறு பகுதிகளில் உற்சாகக் கொண்டாட்டங்கள் நடைபெற்றன.

 

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை நான்கு ரோடு சந்திப்பில் தமிழக வெற்றி கழக (தவெக) நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெருந்திரளாகக் கூடினர். அவர்கள் வெடி வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதுடன், அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மற்றும் வணிகர்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

 

“எங்கள் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அமைச்சராகப் பொறுப்பேற்றிருப்பது திருவாடானை தொகுதிக்குக் கிடைத்த பெருமை. இதன் மூலம் மக்களின் தேவைகள் விரைவாக நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கை உள்ளது,” என்று உள்ளூர் தவெக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

 

இந்தக் கொண்டாட்ட நிகழ்வில் தமிழக வெற்றி கழகத்தின் முக்கிய நிர்வாகிகள், சார்பு அணி பொறுப்பாளர்கள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டு உற்சாகமாகக் கொண்டாடினர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!