ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ₹32.22 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு புதிய வகுப்பறைகள் கட்டும் பணி தொடங்கப்பட்டு ஓராண்டாகியும் இன்னும் நிறைவு பெறாததால் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவுகிறது.
கிராமப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்ட நிதி (RIDF) மூலம் மேற்கொள்ளப்பட்ட இந்த கட்டுமானப் பணிகள் ஆரம்ப கட்டத்திலேயே நின்று போனதாக கூறப்படுகிறது. பணிகள் நடைபெறும் இடத்தில் திட்ட விவரங்கள், ஒப்பந்ததாரர் பெயர், பணிக்கால அவகாசம் உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய அறிவிப்பு பலகையும் வைக்கப்படாததால் பொதுமக்கள் சந்தேகம் எழுந்து வருகின்றனர்.
கோடை விடுமுறை முடிந்து விரைவில் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், புதிய வகுப்பறைகள் பயன்பாட்டிற்கு வராதது மாணவர்களின் கல்வி சூழலை பாதிக்கும் என பெற்றோர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
“மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். பணிகளை தாமதப்படுத்தும் அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.




You must be logged in to post a comment.