அருள்மிகு ஆதிரெத்தினேஸ்வரர் திருக்கோவில் வைகாசி விசாகப் பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் சிறப்பாக தொடங்கியது.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பகுதியில் வரலாற்றுச் சிறப்புமிக்க திருக்கோவில், ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம் நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. இக்கோவிலில் அருள்மிகு சிநேகவல்லி அம்பாள் சமேத அருள்மிகு ஆதிரெத்தினேஸ்வரர் சுவாமிக்கு வைகாசி விசாக திருவிழா இன்று காலை நடைபெற்ற கொடியேற்ற நிகழ்ச்சியுடன் ஆரம்பமானது.
முன்னதாக அனுஞ்சை, வாஸ்து சாந்தி உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து கோவில் கொடிமரத்தில் திருவிழா கொடி ஏற்றப்பட்டது.
இந்த நிகழ்வில் கிராம பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இன்று மாலை இந்திர விமானத்தில் ஐம்பெரும் கடவுள்களின் திருவீதி உலா நடைபெறுகிறது. மேலும், வரும் மே 29ஆம் தேதி திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா நடைபெற உள்ளது. விழா நாட்களில் இரவு தோறும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும் என்று நிர்வாகத்தின தெரிவித்தனர்.




You must be logged in to post a comment.