இலங்கைக்கு கடத்த முயன்ற 12 பெட்டி சிகரெட் பண்டல்கள் பறிமுதல்
கீழக்கரை கடற்கரையில் Q பிரிவு காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு – சுங்கத்துறையிடம் ஒப்படைப்பு
ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செங்கழுநீரோடை கடற்கரை பகுதியில் இலங்கைக்கு சட்டவிரோதமாக கடத்தப்பட இருந்த 12 பெட்டி சிகரெட் பண்டல்களை Q பிரிவு காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், Q பிரிவு காவல் ஆய்வாளர் ஜீவமணி தலைமையில் 3 தலைமை காவலர்கள் கொண்ட குழுவினர் சம்பவ இடத்தில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது கடத்தலுக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 12 பெட்டி சிகரெட் பண்டல்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் மறைந்து இருந்து கடத்தல் கும்பல் வருகையை எதிர்பார்த்து நீண்ட நேரம் கண்காணித்தனர். ஆனால் சம்பவ இடத்திற்கு யாரும் வராததால், கைப்பற்றப்பட்ட சிகரெட் பண்டல்கள் அனைத்தும் நடவடிக்கைக்காக கீழக்கரை சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.
கடலோர பகுதிகளில் நடைபெறும் சட்டவிரோத கடத்தல் நடவடிக்கைகளை தடுக்க காவல்துறையினர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பு மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.




You must be logged in to post a comment.