18 May 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » இலங்கைக்கு கடத்த முயன்ற 350 கிலோ பீடி இலை பறிமுதல்.! இந்திய கடலோர காவல் படை – சுங்கத்துறை இணைந்து அதிரடி நடவடிக்கை.!!

இலங்கைக்கு கடத்த முயன்ற 350 கிலோ பீடி இலை பறிமுதல்.! இந்திய கடலோர காவல் படை – சுங்கத்துறை இணைந்து அதிரடி நடவடிக்கை.!!

எழுதியவர்: Baker BAker May 14, 2026, 11:41 pm

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அடுத்த முயல் தீவு பகுதியில் இந்திய கடலோர காவல் படை மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் இணைந்து நடத்திய கூட்டு ரோந்து பணியின் போது, இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 350 கிலோ பீடி இலை பண்டல்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தகவலின்படி, முயல் தீவு பகுதியில் சந்தேகத்திற்கிடமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10 மூட்டைகளை அதிகாரிகள் சோதனையிட்டபோது, அதில் பெருமளவில் பீடி இலை பண்டல்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அனைத்து மூட்டைகளும் பறிமுதல் செய்யப்பட்டு, மேலான விசாரணைக்காக மண்டபம் சுங்கத்துறை அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.

மேலும், இந்த கடத்தல் முயற்சியில் தொடர்புடைய மர்ம நபர்கள் முயல் தீவு பகுதியில் பதுங்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், இந்திய கடலோர காவல் படை அதிகாரிகள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!