தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம் வடக்கு மாவட்டம் சார்பில் நடைபெற்ற கோடைகால பயிற்சி முகாம் மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்டப் பொருளாளர் ரஹ்மான் அலி தலைமை தாங்கினார். கிளை நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பயிற்சியில் பங்கேற்ற மாணவ-மாணவிகள் தாங்கள் கற்றுத் தேர்ந்த துவாக்கள் மற்றும் திருக்குர்ஆன் சூராக்களை பொதுமக்கள் முன்னிலையில் தைரியமாக ஓதிக் காட்டினர்.
மேலும், “இளைஞர்கள் வழிதவறுவதற்கு பெரிதும் காரணம் பெற்றோர்களா? அல்லது சமூகமா?” என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. இதில் மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு தங்களது கருத்துக்களை முன்வைத்தனர்.
நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக மாநிலப் பேச்சாளர் சகோதரர் ரியாஸ் ஹமீத் கலந்து கொண்டு “குழந்தைகள் ஓர் அமானிதம்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். குழந்தைகளின் வளர்ப்பு மற்றும் அவர்களை நல்வழியில் வழிநடத்த வேண்டிய பொறுப்பு குறித்து அவர் ஆற்றிய உரை அனைவரின் பாராட்டையும் பெற்றது.
இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கிளை நிர்வாகிகள் அகமது அலி மற்றும் ஜபருல்லா ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.
நிகழ்ச்சியின் நிறைவில் பயிற்சியில் சிறப்பாக செயல்பட்ட மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.




You must be logged in to post a comment.