14 May 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » விளையாட்டு செய்திகள் » தென் மாவட்டங்களில் குறைகிறது மழை..

தென் மாவட்டங்களில் குறைகிறது மழை..

எழுதியவர்: Abubakker Sithik May 10, 2026, 9:19 pm

தென் மாவட்டங்களில் நாளை முதல் மழையின் அளவு குறையும் என்றும், வெப்பநிலை இயல்பை விட குறைவாகவே பதிவாகும் எனவும்  வானிலை ஆராய்ச்சியாளர் தென்காசி வெதர்மேன் ராஜா தெரிவித்துள்ளார்.

இது குறித்த வானிலை முன் அறிவிப்பில், தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பெய்து வந்த தொடர் மழையானது தற்போது முடிவுக்கு வந்துள்ளது. நாளை முதல் தென் மாவட்டங்களில் மழையின் அளவு படிப்படியாக குறையும். மழையின் அளவு குறைந்தாலும் வெப்பநிலை அதிகரிக்காது.

அடுத்த சில நாட்களுக்கு தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இயல்பை விட வெப்பநிலை குறைவாகவே பதிவாகும். சில இடங்களில் மட்டும் மிதமான மழை பெய்யும் என தென்காசி வெதர்மேன் ராஜா தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!