18 May 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » +2 பொதுத்தேர்வு முடிவுகள்; மாநில அளவில் 8 ஆம் இடம் பெற்ற தென்காசி மாவட்டம்..

+2 பொதுத்தேர்வு முடிவுகள்; மாநில அளவில் 8 ஆம் இடம் பெற்ற தென்காசி மாவட்டம்..

எழுதியவர்: Abubakker Sithik May 8, 2026, 12:48 pm

தென்காசி மாவட்டம் 97:18% ஒட்டு மொத்த தேர்ச்சி சதவீதத்தைப் பெற்று மாநில அளவில் 8 ஆம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.

இது குறித்த தென்காசி மாவட்ட முதன்மை கல்வி அலுவலக செய்திக்குறிப்பில், 2025-26 ஆம் கல்வியாண்டிற்கான மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத்தேர்வு முடிவுகள் அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால் 08.05.2026 இன்று காலை 9.30 மணியளவில் வெளியிடப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில், 2025-26 ஆம் ஆண்டில் மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வினை 152 மேல்நிலைப் பள்ளிகளைச் சார்ந்த 7408 மாணவர்களும், 8358 மாணவிகளும் மொத்தம் 15766 மாணாக்கர்கள் தேர்வு எழுதியுள்ளனர்.

அவ்வாறு தேர்வு எழுதியவர்களில் 7085 மாணவர்களும், 8237 மாணவிகளும் மொத்தம் 15322 மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தென்காசி மாவட்டம் 97:18% ஒட்டு மொத்த தேர்ச்சி சதவீதத்தைப் பெற்று மாநில அளவில் 8 ஆம் இடம் பிடித்துள்ளது. தென்காசி மாவட்டத்திற்கு உட்பட்ட 152 மேல்நிலைப் பள்ளிகளில் 16 அரசுப்பள்ளிகள் உட்பட மொத்தம் 74 பள்ளிகள் நூறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!