ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகாவுக்கு உட்பட்ட தொண்டி கிறிஸ்தவ ஆலயத்திற்கு எதிரே உள்ள கடற்கரை வழியாக பொதுமக்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது சுமார் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கி கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து உடனடியாக தொண்டி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உடலை கைப்பற்றி விசாரணைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் தொடர்பாக கடலோர காவல் படைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறந்து கிடப்பவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? கடலில் தவறி விழுந்து இறந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மீனவர்கள் மற்றும் பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




You must be logged in to post a comment.