07 May 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருவாடானை பிடாரி அம்மன் கோவிலில் சித்திரைத் திருவிழா கோலாகலம் .!சிம்ம வாகனத்தில் அம்மன் வீதி உலா – பக்தர்கள் திரளாக பங்கேற்பு.!!

திருவாடானை பிடாரி அம்மன் கோவிலில் சித்திரைத் திருவிழா கோலாகலம் .!சிம்ம வாகனத்தில் அம்மன் வீதி உலா – பக்தர்கள் திரளாக பங்கேற்பு.!!

எழுதியவர்: Baker BAker May 6, 2026, 3:19 pm

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க அருள்மிகு ஸ்ரீ அறம் வளர்த்த நாயகி பிடாரி அம்மன் திருக்கோவிலில் சித்திரைத் திருவிழா மே 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.

திருவிழாவையொட்டி தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து, அம்மன் சிறப்பு அலங்காரத்தில் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி, திருவாடானை நான்கு ரத வீதிகள் வழியாக வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

விழாவின் போது வானவேடிக்கைகள் நடைபெற்றதுடன், இளைஞர்களால் பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

இக்கோவில் இராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு உட்பட்டது குறிப்பிடத்தக்கது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!