கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனைக்கு தினசரி 500-க்கும் மேற்பட்ட வெளிநோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இந்நிலையில், மருத்துவமனையில் மருந்து வழங்கும் பிரிவில் போதிய பணியாளர்கள் இல்லாததால் நோயாளிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
மருந்து பெற நோயாளிகள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழல் நிலவுகிறது. முதியவர்கள், பெண்கள் மற்றும் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டவர்கள் கூட பல மணி நேரம் நிற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. சில நேரங்களில் நோயாளிகள் மயக்கம் அடையும் நிலையும் உருவாகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள், சம்பந்தப்பட்ட மருத்துவத்துறை உயர் அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு, மருந்து வழங்கும் பிரிவில் கூடுதல் பணியாளர்களை நியமித்து, நோயாளிகளின் அவதியை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.




You must be logged in to post a comment.