“அதிகாரம் தலைக்கேறிய நிர்வாகம் – மக்கள் புறக்கணிப்பு தொடர்ந்தால் தேர்தல் பின்னடைவு தவிர்க்க முடியாது” என அரசியல் விமர்சகர்கள் எச்சரிக்கை
ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கீழக்கரை பகுதியில் வெளியான வாக்கு எண்ணிக்கை முடிவுகள் திமுகக்கு எச்சரிக்கை மணி அடித்துள்ளன. மொத்தம் 14,030 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றிருந்தாலும், எதிர்பார்க்கப்பட்ட 18 ஆயிரம் வாக்குகளை எட்டத் தவறியது கட்சி வட்டாரத்தில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
பல வாக்குச்சாவடிகளில் திமுக முன்னிலை பெற்றபோதிலும், குறிப்பிட்ட பகுதிகளில் தவெக மற்றும் பாஜக வாக்குகள் அதிகரித்திருப்பது வாக்கு வங்கி பிளவை வெளிப்படையாக காட்டுகிறது. இது சாதாரண சரிவு அல்ல, மக்கள் மனநிலையின் மாற்றத்தைக் காட்டும் முக்கிய அறிகுறி என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
கீழக்கரை நகராட்சி நிர்வாகத்தின் செயல்பாடுகள் மீதான கடும் எதிர்ப்பு இந்த வாக்கு சரிவிற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. பொதுமக்களின் அடிப்படை தேவைகள் புறக்கணிக்கப்பட்டது, குறைகள் தீர்க்கப்படாதது, திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்படாதது, காலதாமதம் காரணமாக மக்கள் வரிப்பணம் வீணாகியது போன்ற குற்றச்சாட்டுகள் பரவலாக எழுந்துள்ளன.
மேலும், சில திமுக நகர் கழக நிர்வாகிகள் அதிகார துஷ்பிரயோகம், மக்கள் தொடர்பு இல்லாமை, தலைக்கனம் கொண்ட செயல்பாடுகள் ஆகியவை பொதுமக்களில் வெறுப்புணர்வை உருவாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. “மக்கள் சேவை செய்ய வேண்டியவர்கள் அதிகாரத்தை காட்டும் நிலைக்கு மாறிவிட்டனர்” என உள்ளூர் மக்கள் கடுமையாக விமர்சிக்கின்றனர்.
நகராட்சி அதிகாரிகளின் அலட்சிய போக்கும், அதை மாவட்ட நிர்வாகம் கண்டும் காணாமல் இருந்ததும் நிலைமை மேலும் மோசமடைந்ததற்கு காரணமாகக் கூறப்படுகிறது. தவறுகளை உடனடியாக சரிசெய்யாத நிர்வாகம், மக்கள் மனதில் ஆழமான எதிர்ப்பை உருவாக்கியுள்ளது.
இந்த நிலையை தொடர்ந்து உதாசீனப்படுத்தினால், வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல்களில் திமுக கடுமையான பின்னடைவை சந்திக்கும் அபாயம் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
“வாக்கு வங்கி பிளவு ஆரம்பமாகிவிட்டது; இதை இப்போது சரிசெய்யவில்லை என்றால், அடுத்த தேர்தலில் அதிர்ச்சி தோல்வி கூட ஏற்படலாம்” என அரசியல் ஆய்வாளர்கள் கடுமையாக எச்சரித்துள்ளனர்.
ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில்
கீழக்கரை 33 வது வாக்குச்சாவடியில் திமுக 338 தவெக 133 பாஜக 19 வாக்குகள்
34 வது வாக்குச்சாவடியில் திமுக 76 தவெக 186 பாஜக 159 வாக்குகள்
35வது வாக்குச்சாவடியில் திமுக 105 தவெக 131 பாஜக 188 வாக்குகள்
36 வது வாக்குச்சாவடியில் திமுக 476 தவெக 120 பாஜக 9 வாக்குகள்
37வது வாக்குச்சாவடியில் திமுக 524 தவெக 89 பாஜக 13 வாக்குகள்
38வது வாக்குச்சாவடியில் திமுக 360 தவெக 70 பாஜக 4 வாக்குகள்
39வது வாக்குச்சாவடியில் திமுக 309 தவெக 67 பாஜக 11 வாக்குகள்
40வது வாக்குச்சாவடியில் திமுக 273 தவெக 54 பாஜக 3 வாக்குகள்
41 வது வாக்குச்சாவடியில் திமுக 439 தவெக 67 பாஜக 7 வாக்குகள்
42வது வாக்குச்சாவடியில் திமுக 474 தவெக 134 பாஜக 29 வாக்குகள்
43 வது வாக்குச்சாவடியில் திமுக 341 தவெக 83 பாஜக 3 வாக்குகள்
44வது வாக்குச்சாவடியில் திமுக 456 தவெக 52 பாஜக 5 வாக்குகள்
45வது வாக்குச்சாவடியில் திமுக 504 தவெக 64 பாஜக 6 வாக்குகள்
46வது வாக்குச்சாவடியில் திமுக 476 தவெக 97 பாஜக 2 வாக்குகள்
47 வது வாக்குச்சாவடியில் திமுக 370 தவெக 72 பாஜக 7 வாக்குகள்
48வது வாக்குச்சாவடியில் திமுக 209 தவெக 45 பாஜக 11 வாக்குகள்
49வது வாக்குச்சாவடியில் திமுக 459 தவெக 122 பாஜக 6 வாக்குகள்
50வது வாக்குச்சாவடியில் திமுக 422 தவெக 107 பாஜக 3 வாக்குகள்
51வது வாக்குச்சாவடியில் திமுக 244 தவெக 58 பாஜக 6 வாக்குகள்
52வது வாக்குச்சாவடியில் திமுக 450 தவெக 98 பாஜக 13 வாக்குகள்
53வது வாக்குச்சாவடியில் திமுக 454 தவெக 95 பாஜக 3 வாக்குகள்
54வது வாக்குச்சாவடியில் திமுக 309 தவெக 127 பாஜக 7 வாக்குகள்
55வது வாக்குச்சாவடியில் திமுக 297 தவெக 142 பாஜக 4 வாக்குகள்
56வது வாக்குச்சாவடியில் திமுக 176 தவெக 272 பாஜக 168 வாக்குகள்
57வது வாக்குச்சாவடியில் திமுக 74 தவெக 198 பாஜக 223 வாக்குகள்
58வது வாக்குச்சாவடியில் திமுக 86 தவெக 211 பாஜக 169 வாக்குகள்
59வது வாக்குச்சாவடியில் திமுக 236 தவெக 327 பாஜக 137 வாக்குகள்
60வது வாக்குச்சாவடியில் திமுக 400 தவெக 117 பாஜக 27 வாக்குகள்
61வது வாக்குச்சாவடியில் திமுக 322 தவெக 109 பாஜக 15 வாக்குகள்
62வது வாக்குச்சாவடியில் திமுக 384 தவெக 135 பாஜக 3 வாக்குகள்
63வது வாக்குச்சாவடியில் திமுக 287 தவெக 83 பாஜக 4 வாக்குகள்
64வது வாக்குச்சாவடியில் திமுக 274 தவெக 219 பாஜக 73 வாக்குகள்
65வது வாக்குச்சாவடியில் திமுக 265 தவெக 165 பாஜக 33 வாக்குகள்
66வது வாக்குச்சாவடியில் திமுக 207 தவெக 57 பாஜக 5 வாக்குகள்
67வது வாக்குச்சாவடியில் திமுக 164 தவெக 34 பாஜக 1 வாக்குகள்
68வது வாக்குச்சாவடியில் திமுக 449 தவெக 117 பாஜக 5 வாக்குகள்
69வது வாக்குச்சாவடியில் திமுக 203 தவெக 46 பாஜக 51 வாக்குகள்
70வது வாக்குச்சாவடியில் திமுக 410 தவெக 70 பாஜக 26 வாக்குகள்
71வது வாக்குச்சாவடியில் திமுக 321 தவெக 76 பாஜக 8 வாக்குகள்
72வது வாக்குச்சாவடியில் திமுக 328 தவெக 63 பாஜக 14 வாக்குகள்
73வது வாக்குச்சாவடியில் திமுக 314 தவெக 122 பாஜக 20 வாக்குகள்
74வது வாக்குச்சாவடியில் திமுக 372 தவெக 56 பாஜக 6 வாக்குகள்
75வது வாக்குச்சாவடியில் திமுக 393 தவெக 241 பாஜக 119 வாக்குகள் பதிவாகின இதில் திமுக மொத்தம் 14,030 வாக்குகளும் தவெக 4,931 வாக்குகளும் பஜக மொத்தம் 1,625 வாக்குகளும் பெற்றுள்ளனர்.




You must be logged in to post a comment.