இராமநாதபுரம்,
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை 04.05.2026 அன்று தேவிபட்டிணம் புல்லங்குடி கிராமம் அருகே உள்ள அண்ணா பல்கலைக்கழக கல்லூரியில் நடைபெறவுள்ளதை முன்னிட்டு, மாவட்ட காவல்துறையினர் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்.
வாக்கு எண்ணிக்கை நடைபெறும் கல்லூரி வளாகத்திலிருந்து 100 மீட்டர் சுற்றளவிற்குள் அனைத்து வாகனங்களும் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, 04.05.2026 அன்று காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை ஒருநாள் மட்டும் போக்குவரத்து மாற்றம் அமல்படுத்தப்படுகிறது.
தேவிபட்டிணத்திலிருந்து இராமநாதபுரம் நோக்கிச் செல்லும் வாகனங்கள் கோப்பேரிமடம் சோதனைச்சாவடி, சித்தார்கோட்டை, அத்தியூத்து, பனைக்குளம், நதிப்பாலம் மற்றும் பட்டிணம்காத்தான் ECR வழியாகச் செல்ல வேண்டும்.
அதேபோல், இராமநாதபுரத்திலிருந்து தேவிபட்டிணம் வழியாக திருவாடானை, காரைக்குடி, திருச்சி மற்றும் தொண்டி நோக்கிச் செல்லும் வாகனங்கள் பட்டிணம்காத்தான் ECR, நதிப்பாலம், பனைக்குளம், அத்தியூத்து, சித்தார்கோட்டை மற்றும் கோப்பேரிமடம் சோதனைச்சாவடி வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும்.
பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஒழுங்கை கருத்தில் கொண்டு காவல்துறை அறிவுறுத்தும் மாற்று வழித்தடங்களை பயன்படுத்துமாறு மாவட்ட காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.




You must be logged in to post a comment.