கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் 140வது ஆண்டு உலக தொழிலாளர் தினத்தை முன்னிட்டு சிஐடியு பொது தொழிலாளர் சங்கத்தின் சார்பில் சிறப்பு கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
உழைப்பாளர் தினத்தையொட்டி மேட்டுப்பாளையம் காய்கறி மார்க்கெட்டில் சிஐடியு சங்கக் கொடி ஏற்றப்பட்டு, தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சிக்கு சிஐடியு பொது தொழிலாளர் சங்க தாலுக்கா செயலாளர் எஸ். பாஷா தலைமை தாங்கினார். மாநில குழு உறுப்பினர் தோழர் சத்யா மற்றும் தாலுக்கா தலைவர் சம்சுதீன் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியை தோழர் ஷானவாஸ் ஒருங்கிணைத்தார். தோழர் மகாலிங்கம் வரவேற்புரை வழங்கினார். தொழிலாளர் தினக் கொடியை தோழர் சாரதி ஏற்றி வைத்தார்.
இதில் தோழர்கள் சாமுவேல், முகமது அலி ஜின்னா, கனகமணி, சிவக்குமார், லட்சுமி அம்மாள், வசந்தம்மாள், குணசேகரன் உள்ளிட்ட பலர் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு தொழிலாளர் ஒற்றுமையை வலியுறுத்தினர்.
நிகழ்ச்சியின் நிறைவாக தோழர் ஹபிபுல்லா நன்றி உரையாற்றினார்.




You must be logged in to post a comment.