01 May 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » அஞ்சுகோட்டையில் சித்ரா பௌர்ணமி திருவிழா கோலாகலம் .!

அஞ்சுகோட்டையில் சித்ரா பௌர்ணமி திருவிழா கோலாகலம் .!

எழுதியவர்: Baker BAker May 1, 2026, 4:21 pm

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா அஞ்சுகோட்டை கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ஆதினமிழகி அய்யனார், ஸ்ரீ அழகிய நாயகி அம்மன் மற்றும் ஸ்ரீ ஆணிமுத்து கருப்பர் ஆலயங்களின் 37-ஆம் ஆண்டு சித்ரா பௌர்ணமி பெருவிழா பக்தி மிகு சூழலில் சிறப்பாக நடைபெற்றது.

கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கிய திருவிழா நாட்களில் தினமும் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன.

விழாவின் முக்கிய நிகழ்வான பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. அதிகாலை முதலே விரதமிருந்த பக்தர்கள் கரையகோட்டை கருப்பர் கோயிலிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு, பால் காவடி, வேல் காவடி மற்றும் பால்குடம் எடுத்துச் சென்று ஆலயத்தை வந்தடைந்தனர்.

பின்னர் கோயில் முன்பாக அமைக்கப்பட்டிருந்த பூக்குழியில் பக்தர்கள் தீமிதித்து தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.

இந்த நிகழ்வைக் காண அஞ்சுகோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டனர். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!