ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலையில், சதக்கத்துன் ஜாரியா நடுநிலைப் பள்ளி எதிர்புறத்தில் சிவா என்பவர் பெட்டிக்கடை நடத்தி வருகிறார்.
நேற்று இரவு வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு சென்ற அவர், இன்று காலை கடையை திறந்து பார்த்தபோது கடையின் உள்ளே இருந்த பல்வேறு பொருட்கள் மற்றும் ரூ.1500 பணம் மர்ம நபரால் திருடிச் செல்லப்பட்டிருப்பது தெரியவந்தது.
இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு CCTV கேமராவில் பதிவாகியுள்ளது. அதனை ஆதாரமாகக் கொண்டு குற்றவாளியை அடையாளம் காண காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து கடை உரிமையாளர் கீழக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொடர்ந்து நடைபெறும் சிறிய அளவிலான திருட்டுச் சம்பவங்கள் காரணமாக அப்பகுதி வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது.







You must be logged in to post a comment.