ராமநாதபுரத்தை அடுத்த புதுமடம் கடற்கரை வழியாக இலங்கைக்கு கடத்தப்பட இருந்த சுமார் ரூ.50 லட்சம் மதிப்பிலான பல்வேறு பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
புதுமடம் கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக பொருட்கள் கடத்தப்பட உள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது புதுமடம் தெற்கு தெருவைச் சேர்ந்த பைசூல் என்பவருக்கு சொந்தமான சிமெண்ட் கிடங்கில் சோதனை நடத்தப்பட்டது. சோதனையில், இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த பூச்சி மருந்து பண்டல்கள், ஷாம்பு பாக்கெட்டுகள், காபித்தூள் பாக்கெட்டுகள், சோப்பு பண்டல்கள் உள்ளிட்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு சுமார் ரூ.50 லட்சம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடத்தல் கும்பலுடன் தொடர்புடையவர்கள் குறித்து தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது.









You must be logged in to post a comment.