திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள சிவகிரிபட்டியில் இன்று போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளரான பத்மநாபன் தனது வாக்கினைப் பதிவு செய்தார்.
சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மாநிலம் முழுவதும் முக்கிய வேட்பாளர்கள் தங்களது சொந்த ஊர்களில் வாக்களித்து வருகின்றனர். அந்த வகையில், நாயுடு நாயக்கர் பேரவையின் தலைவருமான பத்மநாபன், தனது குடும்பத்தினருடன் சேர்ந்து புதிய பஞ்சாயத்து அலுவலகத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி எண் 56-ல் பொதுமக்களுடன் வரிசையில் நின்று வாக்களித்தார்.
வாக்களித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சின்னம்மாவின் ஆதரவாளர்கள் உற்சாகத்துடன் வாக்களிக்க வந்து கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக போடிநாயக்கனூர் தொகுதியில் அதிக அளவில் ஆதரவு காணப்படுகிறது” என்று தெரிவித்தார்.
ஒரு தொகுதியின் வேட்பாளராக இருந்தபோதிலும், தனது சொந்த ஊரில் வந்து வாக்களித்த அவருக்கு அப்பகுதி மக்கள் மற்றும் ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.





You must be logged in to post a comment.