23 April 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » மேட்டுப்பாளையத்தில் திமுக வேட்பாளர் கவிதா கல்யாணசுந்தரம் வாக்களிப்பு.!

மேட்டுப்பாளையத்தில் திமுக வேட்பாளர் கவிதா கல்யாணசுந்தரம் வாக்களிப்பு.!

எழுதியவர்: Baker BAker April 23, 2026, 12:46 pm

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (ஏப்ரல் 23, 2026) மாநிலம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முக்கிய வேட்பாளர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.

மேட்டுப்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் திராவிட முன்னேற்றக் கழகம் வேட்பாளர் கவிதா கல்யாணசுந்தரம், மேட்டுப்பாளையம் கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.எம்.டி. கல்யாணசுந்தரம் மற்றும் குடும்பத்தாருடன் காரமடை அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் வந்து வாக்களித்தார். பின்னர் அவர், பொதுமக்கள் அனைவரும் தவறாமல் வாக்களித்து ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!