கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில், சி.ஐ.டி.யு (CITU) சார்ந்த சாலையோர சிறு வியாபாரிகள், தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றும் நோக்கில் இன்று கடைகளை மூடி வைத்து வாக்களிக்க சென்றனர்.
அன்றாட வருமானத்தை நம்பி வாழும் இவ்வியாபாரிகள், ஒரு நாள் வியாபாரம் செய்யாமல் இருந்தால் கூட அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் சூழலில் இருந்தபோதிலும், ஜனநாயகத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து வாக்கு செலுத்துவதற்கு முன்னுரிமை வழங்கியுள்ளனர்.
“5 ஆண்டுகளுக்கு ஒருமுறை கிடைக்கும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, நம்மை பாதுகாக்கும் தலைவர்களை தேர்ந்தெடுப்பது மிக முக்கியம்” என்ற எண்ணத்துடன் அவர்கள் கடைகளை தற்காலிகமாக மூடி விட்டு வாக்களிக்க சென்றதாக தெரிவித்தனர்.
இச்செயல், பொதுமக்களிடையே நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. ஜனநாயக உரிமையையும் கடமையையும் ஒருசேர மதிக்கும் இவ்வியாபாரிகளின் முயற்சி பாராட்டுக்குரியது.




You must be logged in to post a comment.