இராமநாதபுரம் வடக்கு மாவட்டத்தின் சார்பில் தேவிபட்டினம் கிளை மர்கஸில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) 10வது மாவட்ட பொதுக்குழு நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு மாநிலச் செயலாளர் சகோ. ஐ. அன்சாரி தலைமை தாங்கினார். மாநிலப் பொருளாளர் சகோ. காஞ்சி இப்ராஹிம் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் கடந்த காலச் செயல்பாடுகள் குறித்த ஆண்டறிக்கையை மாவட்டச் செயலாளர் சகோ. அல்பார் அமீன் சமர்ப்பித்தார். மாவட்டத்தின் வரவு-செலவு அறிக்கையை மாவட்டப் பொருளாளர் சகோ. முகமது ஆதில் விளக்கினார். மேலும், எதிர்கால திட்டங்களை மாவட்டத் தலைவர் சகோ. ரகுமான் அலி எடுத்துரைத்தார்.
மாநிலப் பொருளாளர் சகோ. காஞ்சி இப்ராஹிம் “பொறுப்பு ஒரு அமானிதம்” என்ற தலைப்பில் உரையாற்றி, பொறுப்பேற்கும் நிர்வாகிகள் இறைபயம் மற்றும் கடமை உணர்வுடன் செயல்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
இந்நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக, முந்தைய மாவட்ட நிர்வாகம் கலைக்கப்பட்டு ஜனநாயக முறையில் புதிய நிர்வாகிகள்
மாவட்டத் தலைவர் – மங்களக்குடி முகவை அப்பாஸ்
மாவட்டச் செயலாளர் – திருப்பாலைக்குடி யாசிர் அரபாத்
மாவட்டப் பொருளாளர் – புதுவலசை ரஹ்மான் அலி
மாவட்டத் துணைத் தலைவர் – நம்புதாளை செய்யது அபுதாஹிர்
மாவட்டத் துணைச் செயலாளர்கள் – தொண்டி ஆசிப் அஹமது, R.S.மங்கலம் சல்மான், M.R.பட்டினம் அப்துல் பாசித் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
மேலும், “அண்ணல் நபியே அழகிய முன்மாதிரி” என்ற மாநில செயல்திட்டம் குறித்து மாநிலச் செயலாளர் விரிவாக விளக்கமளித்தார்.
இப்பொதுக்குழுவில் 5 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை சமூக நீதி, மாநில உரிமைகள், மதச்சார்பின்மை மற்றும் ஜனநாயகப் பாதுகாப்பு போன்ற முக்கிய அம்சங்களை உள்ளடக்கியவை.
நிகழ்ச்சியின் இறுதியில், நன்றி தெரிவித்து பிரார்த்தனையுடன் பொதுக்குழு நிறைவுற்றது.




You must be logged in to post a comment.