கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டமன்றத் தொகுதியில், மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள எஸ்.எம்.டி. கவிதா கல்யாண சுந்தரம் அவர்களுக்கு ஆதரவாக Centre of Indian Trade Unions (CITU) பொதுத் தொழிலாளர் சங்கத்தினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தத் தொகுதியில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு பெண் வேட்பாளர் அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதனால் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிக கவனம் ஈர்க்கப்பட்டுள்ளது. குறிப்பாக தொழிற்சாலை தொழிலாளர்கள், கூலி தொழிலாளர்கள், தினக்கூலி பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடம் நேரடியாகச் சென்று சந்தித்து, அவர்களின் பிரச்சினைகளை கேட்டு பதிவு செய்து வருவது பிரச்சாரத்திற்கு வலுசேர்த்துள்ளது.
வேட்பாளர் கவிதா கல்யாண சுந்தரம் முன்னதாக பல்வேறு சமூகநல நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தவர். குடிநீர் வசதி, தொழிலாளர் நலன், பெண்கள் சுயஉதவி குழுக்கள் மேம்பாடு, அரசு நலத்திட்டங்கள் கிடைப்பதில் உள்ள சிக்கல்கள் போன்ற பிரச்சினைகளில் தொடர்ந்து செயல்பட்டு வந்ததால், அவருக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உருவாகியுள்ளது.
CITU அமைப்பின் கீழ் தனிப்பட்ட தேர்தல் பணிக்குழுக்கள் அமைக்கப்பட்டு, பகுதிவாரியாக வீடு தேடி வாக்கு சேகரிப்பு நடைபெற்று வருகிறது. காலை முதல் இரவு வரை தாள்வாரியாக பிரிக்கப்பட்ட குழுக்கள் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன. இளைஞர்கள் மற்றும் பெண்கள் அணிகளும் இதில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் கூட்டணி கட்சியினரும் ஒருங்கிணைந்த முறையில் செயல்பட்டு, தெருமுனை கூட்டங்கள், சிறிய அளவிலான பொதுக்கூட்டங்கள் மற்றும் நேரடி சந்திப்பு நிகழ்ச்சிகள் மூலம் வாக்காளர்களை அணுகி வருகின்றனர். “பெண் வேட்பாளர் என்பதாலும், எளிதில் அணுகக்கூடிய தன்மையாலும் வாக்காளர்கள் மத்தியில் நல்ல ஆதரவு உருவாகியுள்ளது” என சி.ஐ.டி.யு நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
வரவிருக்கும் தேர்தலில் தொழிலாளர் மற்றும் சாதாரண மக்களின் ஆதரவு இந்த வேட்பாளருக்கு திரளாக கிடைக்கும் என்றும், வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.




You must be logged in to post a comment.