21 April 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரம் தொகுதி கீழக்கரையில் காதர்பாட்சா முத்துராமலிங்கத்திற்கு உற்சாகமான மக்கள் வரவேற்பு.!

இராமநாதபுரம் தொகுதி கீழக்கரையில் காதர்பாட்சா முத்துராமலிங்கத்திற்கு உற்சாகமான மக்கள் வரவேற்பு.!

எழுதியவர்: Baker BAker April 17, 2026, 12:24 am

இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராக களம் காணும் காதர்பாட்சா முத்துராமலிங்கம் கீழக்கரை நகரில் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

ஏர்வாடி முக்கு ரோடு முதல் ரோட்டரி கிளப் வரை உள்ள பகுதிகளில் வீடு தோறும் சென்று, பொதுமக்களை சந்தித்து, கூட்டணியின் வெற்றி சின்னமான உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவு கோரினார். இந்தப் பிரச்சாரத்திற்கு மக்கள் மத்தியில் மிகுந்த உற்சாகமான வரவேற்பு கிடைத்தது.

இந்நிகழ்வில் நகர் கழக செயலாளர் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு, பிரச்சாரத்தை வலுப்படுத்தினர்.

மேலும், சிறுபான்மை மக்களின் நலனில் அக்கறை கொண்டு செயல்படும் திராவிட மாடல் அரசுக்கும், இராமநாதபுரம் தொகுதி வேட்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் அவர்களுக்கும் தொடர்ந்து ஆதரவு அளிப்போம் என்று பொதுமக்கள் உறுதியளித்தனர்.

இந்த பிரச்சாரத்தின் மூலம், தொகுதியில் கூட்டணிக்கு சாதகமான சூழல் உருவாகி வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!