கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள காட்டூர் பள்ளிவாசலில் புதிதாக கட்டப்பட்ட பெண்கள் மதரசாவை முன்னிட்டு, ஐக்கிய ஜமாஅத் பேரவை நிர்வாகிகளையும் மற்றும் அனைத்து பள்ளி நிர்வாகிகளையும் முன்னாள் எம்.பி. ஜனாப் எம். எம். அப்துல்லா சந்தித்தார்.
இந்த சந்திப்பில் திமுக மாநிலவை உறுப்பினர் அஷ்ரப் அலி, எம்.ஏ.ஆர்.கே. ஹக்கீம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அவர்கள், வெற்றி வேட்பாளரான எஸ். எம். டி. கவிதா கல்யாணசுந்தரம் அவர்களுக்கு ஆதரவாக வாக்குகளை சேகரித்தனர்.
மேலும், மேட்டுப்பாளையத்தில் உள்ள ஈது ஹா மைதானத்தை விரிவாக்கம் செய்யவும், இரண்டு கபஸ்தான்கள் (மையவாடி) அமைக்கவும் உள்ளிட்ட பல கோரிக்கைகள் முன்னாள் எம்.பி. எம். எம். அப்துல்லா அவர்களிடம் வைக்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த அவர், ஆட்சி அமைந்ததும் மக்கள் முன்வைத்த அனைத்து கோரிக்கைகளும் நிச்சயமாக நிறைவேற்றப்படும் என்று உறுதி அளித்தார்.





You must be logged in to post a comment.