21 April 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » உலக செய்திகள் » செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » முதுகுளத்தூர் தொகுதியில் தேர்தல் அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி.!

முதுகுளத்தூர் தொகுதியில் தேர்தல் அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி.!

எழுதியவர்: Baker BAker April 15, 2026, 11:06 pm

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கான தேர்தல் பணியில் ஈடுபட உள்ள அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி, முதுகுளத்தூர் சோனை மீனாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. இப்பயிற்சியை முதுகுளத்தூர் தொகுதி தேர்தல் பார்வையாளர் (பொது) உலகநாதன் முன்னிலையில், மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவருமான சிம்ரன்ஜீத் சிங் காலோன் பார்வையிட்டார்.

அப்போது அவர், தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களை முறையாக பின்பற்றி, பயிற்சியில் கற்றுக்கொள்ள வேண்டிய அனைத்து பணிகளையும் தெளிவாக புரிந்து கொண்டு, தேர்தல் நாளில் சிறப்பாக செயல்பட வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இதனைத் தொடர்ந்து, மாவட்ட தேர்தல் அலுவலர் (209) பரமக்குடி (தனி), (210) திருவாடானை, (211) இராமநாதபுரம் ஆகிய பகுதிகளுக்கு சென்று, அங்கு நடைபெற்ற இரண்டாம் கட்ட பயிற்சியையும் பார்வையிட்டார். ஒவ்வொரு வாக்குச்சாவடி அலுவலரும் தங்களுடைய சந்தேகங்களை தீர்த்துக்கொண்டு, வாக்குப்பதிவு நாளில் துல்லியமாக பணியாற்ற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அலுவலர் கங்காதேவி, வட்டாட்சியர் கோபிநாத் மற்றும் பல அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!