இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கீழக்கரையில் நகர் திமுக கழக சார்பில் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து தீவிர வாக்கு சேகரிப்பு நடைபெற்றது. இந்த வாக்கு சேகரிப்பு நிகழ்ச்சியில், பருத்திக்கார தெரு, கிழக்குத் தெரு, மொட்டப்பிள்ளை தெரு, வெள்ளாட்டு தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களை வீடு தோறும் நேரில் சந்தித்து உரையாடப்பட்டது.
இந்த சந்திப்பின்போது, திராவிட மாடல் ஆட்சியில் கடந்த காலங்களில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்கள், அடிப்படை வசதிகளின் விரிவாக்கம், கல்வி, சுகாதாரம் மற்றும் சமூகநீதி சார்ந்த முன்னேற்றங்கள் குறித்து பொதுமக்களுக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. மேலும், இந்த ஆட்சியின் தொடர்ச்சியே மாநிலத்தின் முழுமையான வளர்ச்சிக்கான அடித்தளமாக அமையும் என்பதும் வலியுறுத்தப்பட்டது.
கீழக்கரை நகரின் சார்பில் நடைபெற்ற இந்த வாக்கு சேகரிப்பு நிகழ்ச்சியில் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டு உற்சாகமான சூழலை உருவாக்கினர்.
தொடரும் வளர்ச்சி பயணத்திற்காக வெற்றிச் சின்னமான உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவு அளிக்குமாறு வாக்காளர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. பொதுமக்கள் அளித்த அன்பான வரவேற்பும், உற்சாகமான ஆதரவும், இந்தத் தொகுதியில் மாபெரும் வெற்றிக்கான நம்பிக்கையை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.














You must be logged in to post a comment.