இராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, சட்டம் மற்றும் ஒழுங்கை உறுதிப்படுத்தும் வகையில் காவல்துறையினர் மாவட்டம் முழுவதும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, கமுதி உட்கோட்டத்திற்குட்பட்ட கானா விளக்கு சோதனைச் சாவடியில் இன்று பறக்கும் படையினர் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனை பணிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினருக்கு தேவையான அறிவுறுத்தல்களையும் வழங்கினார்.
தேர்தல் காலத்தில் விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுவதை உறுதி செய்யும் நோக்கில், இத்தகைய சோதனைகள் தொடர்ந்து நடைபெறும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




You must be logged in to post a comment.