19 May 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் – 2026: 100% வாக்களிப்பு விழிப்புணர்வு பேரணி.!

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் – 2026: 100% வாக்களிப்பு விழிப்புணர்வு பேரணி.!

எழுதியவர்: Baker BAker April 7, 2026, 8:57 pm

இராமநாதபுரம் நகராட்சி பழைய பேருந்து நிலையத்தில், தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் – 2026-ஐ முன்னிட்டு, 100% வாக்களிப்பை வலியுறுத்தும் வகையில் இரண்டு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

மாவட்டத்தில் பொதுமக்களுக்கு வாக்களிப்பின் அவசியத்தை எடுத்துரைக்கும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்துறையின் மூலம் அங்கன்வாடி பணியாளர்கள் விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி, இரண்டு சக்கர வாகனங்களில் நகரின் முக்கிய வீதிகள் வழியாக பேரணியில் கலந்து கொண்டு, 100% வாக்களிப்பின் முக்கியத்துவத்தை பொதுமக்களுக்கு எடுத்துரைத்தனர்.

பேரணி நகரின் முக்கிய பகுதிகள் வழியாக சென்று, இறுதியாக பழைய பேருந்து நிலையத்தை வந்தடைந்தது.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மாவட்ட திட்ட இயக்குநர் பாபு, மாவட்ட சமூக அலுவலர் தேன்மொழி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட வட்டார அலுவலர்கள் கமலி, சாந்தி, முத்துலட்சுமி மற்றும் பல அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!