19 May 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரம் – வாக்கு எண்ணும் மையம் ஆய்வு.!

இராமநாதபுரம் – வாக்கு எண்ணும் மையம் ஆய்வு.!

எழுதியவர்: Baker BAker April 7, 2026, 8:40 pm

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 முன்னிட்டு, இராமநாதபுரம் அண்ணா பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தை தேர்தல் பார்வையாளர்கள் நேரில் ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வில் தேர்தல் பார்வையாளர்களாக டாக்டர் மணிஷ் ரஞ்சன் (திருவாடானை தொகுதி), ஓம் பிரகாஷ் (இராமநாதபுரம் தொகுதி), ரெஹனா பதூல் (பரமக்குடி – தனி தொகுதி), உலகநாதன் (முதுகுளத்தூர் தொகுதி) ஆகியோர் கலந்து கொண்டு ஏற்பாடுகளை பார்வையிட்டனர்.

மேலும், காவல் துறை தேர்தல் பார்வையாளராக ஜலிந்தர் தத்தாத்ரிய சுபேகர், மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி. சந்தீஷ் ஆகியோரும் நேரில் சென்று பாதுகாப்பு மற்றும் நிர்வாக ஏற்பாடுகளை ஆய்வு செய்தனர்.

வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு, கண்காணிப்பு மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பான ஏற்பாடுகள் திருப்திகரமாக உள்ளன என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!